தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு
24 Tamil News
reporter

இன்று (டிசம்பர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ஒரு
சவரன் ரூ.1,00,560க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 15ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது. அன்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்து 120 ரூபாய் ஆக விற்பனை ஆனது.
மறுநாள் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலை நேற்று முன்தினம்( டிச.,20) கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை ஆகிறது.
இன்று மதியம் தங்கத்தின் விலை மீண்டும் 720 ரூபாய் அதிகரித்தது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஒரு லட்சத்து ஐநூற்று 60 ரூபாயாக விற்பனை ஆனது. இது சாமானிய மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
